செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (13:46 IST)

கன்னி: ஆனி மாத ராசி பலன்கள்

(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) - கிரகநிலை: சுக  ஸ்தானத்தில்  கேது, சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் (வ) - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ, புதன்(வ), சூர்யன்   என  கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
 
15-06-2020  காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-07-2020 அன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
துரிதமாக வேலைகளை முடிக்கக் கூடிய கன்னி ராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம்  செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.
 
குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள்,  உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.
 
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம்  கோபமான வார்த்தைகளை பேசாமல்  சாந்தமாக  உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். 
 
கலைத்துறையினருக்கு சற்று மந்தமான சூழ்நிலை காணப்படும், இந்த காலகட்டத்தை ஓய்வெடுக்க பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலைகள் சற்று தாமதமாக வந்து  சேரும். கவலை வேண்டும். 
 
அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணவிஷயங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். மேலிடத்திலிருந்தும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களை வந்தடையும்.
 
பெண்களுக்கு பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.
 
உத்திரம்:
 
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
 
ஹஸ்தம்:
 
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள்.  விசேஷ நிகழ்ச்சிகளில்  குடும்பத்தினருடன்  கலந்து கொள்ள நேரிடும். கணவன்  மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.
  
சித்திரை:
 
இந்த மாதம் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி  இருக்கும். மனோதைரியம் கூடும்.
 
பரிகாரம்: புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனுக்கு பால் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வணங்கி வருவது புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 16, 17, 18; ஜூலை 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 7, 8.